கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு துணை ராணுவப்படை வீராங்கனைகள் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு இந்திய துணை ராணுவப்படை வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-10-08 06:35 GMT

கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு இந்திய துணை ராணுவப்படை வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய துணை ராணுவப்படை வீராங்கனைகள் 140 பேர் கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணியாக செல்கின்றனர். பெண்களை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற தலைப்பில் அவர்கள் விழிப்புணர்வு பேரணியாக செல்கின்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையின் துணை ராணுவ பெண் கமாண்டோக்கள் 140 பேர் கலந்து கொண்டுள்ளனர். 60 மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்லும் இந்த குழுவினருக்கு துணை கமாண்டர் சரவணண் மேற்பார்வையில் இந்திய மத்திய பாதுகாப்பு படையின் துணை ராணுவ மகளிர் பிரிவு கமாண்டர் சிந்து தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்கின்றனர்.


இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து குஜராத் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அங்கு அவருக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தில் உள்ள 7 அடி உயர வீரபாண்டிய கட்டபொம்மனின் வெங்கல சிலைக்கு வீராங்கனைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், மோட்டார் சைக்கிளில் மீண்டும் பேரணியை தொடங்கினர். இந்த நிகழ்ச்சியின் போது அவர்களை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், நயினார் பாண்டியன், ஆதிலட்சுமிஅந்தோணி, தேவிகண்ணன் முன்னாள் கவுன்சிலர்கள் சேக்தாவூது சந்தானம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் கயத்தாறு பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News