கோவில்பட்டியில் 36-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா
கோவில்பட்டியில் 36-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.;
புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, மாவட்ட நூலக ஆணைக்குழு, திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் கோவில்பட்டியில் 36-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த புத்தக கண்காட்சியை நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமையில், திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புத்தக கண்காட்சியில் பொது அறிவு, சுய முன்னேற்றம், விஞ்ஞானம், பழமொழிகள், அறிவியல், புகழ்பெற்ற நாவல்கள், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் முன்னணி பதிப்பகப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, காந்தி மண்டப நிர்வாக பொறுப்பாளர் திருப்பதி ராஜா, காங்கிரஸ் கட்சி முன்னாள் நகர தலைவர் சண்முகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.