மறைந்த எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் படித்த பள்ளியை புதுப்பிப்பது,அரங்கம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மறைந்த எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் சொந்த ஊரில் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பது மற்றும் அரங்கல் அமைப்பது குறித்து கோவில்பட்டி அருகே இடைச்செவலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜாநாராயணன் கடந்த மாதம் வயது மூப்பு காரணமாக காலமானார்.இந்நிலையில் அவருக்கு மணிமண்டபமும், அரங்கம் நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள கி.ராஜாநாராயணன் பிறந்த ஊரான இடைசெவலில் அவர் பயின்ற பள்ளி மற்றும் அங்கு அமைக்கப்படும் அரங்கு நூலகம் அமைப்பது குறித்து ஆய்வு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
மறைந்த எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் பயின்ற பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கான ஆய்வு மற்றும் நூலகம் அமைப்பதற்கான இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளியை புதுப்பிப்பதற்காக 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு குழுக்களை அமைத்து அதில் மருத்துவத் துறையினர் உள்ளாட்சித் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஒரு குழுவை அமைத்து அந்தந்த கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உண்டான சிகிச்சை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதேபோல் கிராமத்தில் ஒரே தெருவில் மூன்று பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அப்பகுதியில் அனைத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் அதேபோல் பல்ஸ் மீட்டரில் அவருடைய ஆக்சிஸன் அளவு சரிபார்க்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசியை பொறுத்தளவில் இன்னும் ஓரிரு நாள்களில தடுப்பூசிகள் வரவுள்ளது .மேலும் ஏற்கனவே 12 குழுக்களை அமைத்து அனைத்து கிராமங்களில் பெரும்பாலான மக்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.இதன் நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது இனி வரும் தடுப்பூசிகள் வரவர அனைவருக்கும் போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.