கோவில்பட்டியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 50 கடைகளை மூடிய நகராட்சி அதிகாரிகள்,
தமிழக அரசால் இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ள சில சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பாத்திரக்கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், பேன்சி ஸ்டோர், நகைக்கடை, ஜவுளிக்கடை, சலூன் கடைகள், செருப்பு கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கோவில்பட்டி நகர்பகுதிகளில் ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு, மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
நகராட்சி ஆணையாளர் ஒ.ராஜாராம் அவர்கள் உத்திரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், வள்ளிராஜ் நேரில் சென்று மேற்குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு, மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் திறப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ள பாத்திரக்கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், பேன்சி ஸ்டோர், நகைக்கடை, ஜவுளிக்கடை, சலூன் கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட 50 கடைகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மூடப்பட்டது. 16 கடைகளில் முககவசம் அணியாமல் இருந்து 29 நபர்களுக்கு ரூ.200- வீதம் ரூ.5800 அபராதம் விதிக்கப்பட்டது.