கயத்தாறில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது

Update: 2021-06-07 17:39 GMT

கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் 

கயத்தாறில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் சில மர்ம நபர்கள் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கயத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கயத்தாறு ஆற்றங்கரை சுடலை கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (21), அதே ஊரைச் சேர்ந்த அழகுபாண்டி மகன் அய்யாத்துரை (19), பரமசிவன் மகன் வைகுண்டராமன் (21) என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News