கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு பங்கேற்றார்
கோவில்பட்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதன் நிர்வாகிகள் சிவபெருமாள், சீனிராஜ் மற்றும் பெருமாள் சாமி ஆகியோர் ஏற்பாட்டில் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு பொது மக்களுக்கு முககவசம், கையுரை, சானிடைசர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அதிமுக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அம்பிகா வேலுமணி , அபிரகாம் அய்யாத்துரை, ஆரோக்கியராஜ், முன்னாள் நகர்மன்ற துணைதலைவர் ராமர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணச்சலசாமி, பழனிகுமார், பழனி முருகன், விக்னேஷ், ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.