கோவில்பட்டியில் சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தி நாம்தமிழர்கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகராட்சியில் 30-ஆவது வார்டு பாரதிநகர் 4-ஆவது தெருவில் வாழைமரங்களை நட்டு போராட்டம் நடத்தினர்;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர் 4வது தெரு பகுதியில் சாலைப்பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளதைக்கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர் 4வது தெரு பகுதியில் சாலை சேதமடைந்ததை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் பணிகள் டெண்டர் விடப்பட்டு, சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதற்காக சேதமடைந்த சாலைகள் தேண்டப்பட்ட நிலையில் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவ,மாணவிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர வடிகால்களும் சீரமைக்கப்படாததல் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து சாலையில் தேங்கி தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள வடிகால்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்;ப்பாட்டத்தில் அப்பகுதி பொது மக்கள் , நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு வாழை மரங்களை நட்டுவைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.