ஜாதி, மதம் இல்லாத உணர்வை உருவாக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

ஜாதி, மதம் இல்லாத ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Update: 2023-09-08 15:26 GMT

கோவில்பட்டியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் மாணவி ஒருவருக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம், ஜி.வி.என் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

தொன்மை வாய்ந்தது நம்முடைய தமிழ் நாகரிகம். தமிழ்நாடு என்பதை நாம் அதன் மூலம் அறிய முடிந்தது. சுதந்திரத்திற்காக போராடிய மாவட்டம் நம்முடைய தூத்துக்குடி மாவட்டம். அதற்கு பின்பு மகாகவி பாரதியார் தம்முடைய புரட்சிகரமான வரிகளால் நம்மிடையே சுதந்திரம் பெற்று ஆக வேண்டும் என்ற உணர்வை தூன்டினார்.

தூங்கி கிடந்த நமது மக்களை பாரதியின் கவிதை வரிகள் தட்டி எழுப்பியது. அவர் எழுதிய கவிதை வரிகள் தீர்க்க தரிசன கவிதையாக இருந்தது. அவர் எழுதிய அவருடைய கவிதை வரிகள் ஆடுவோமே பல்லு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்மடி என்பது தீர்க்க தரிசனமாக சுதந்திரத்திற்கு முன்பே ஒரு கற்பனை கவிதையெல்லாம் அவர் எழுதியிருந்தார்.

இது அவர் வாழ்ந்த மண். அது போல நம்முடைய வ.உ. சிதம்பரனார் பெரிய வல்லரசு ஆன ஆங்கிலேயரை எதிர்த்து தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டவர். நமக்குன்னு ஒரு கப்பல் நாம் கப்பலில் தான் பொருளை அனுப்ப வேண்டும். அந்த கப்பலை தான் உபயோகிக்க வேண்டுமென்று அந்த ஆங்கிலேயரை எதிர்த்து அவ்வளவு போராட்டம் செய்து அவ்வளவு துன்பப்பட்டார்.

ஆங்கிலேயர் அவரை துன்புறுத்தி கடைசியில் அவரிடம் யாரும் தொடர்பு வைக்கக்கூடாது. தொழில் தொடர்பு வைக்ககூடாது. அவர் ஒரு வழக்கறிஞர் அவரை வழக்கு ஆட விடக்கூடாது என்ற அளவுக்கு அடக்கினர். கடைசியில் அவர் எல்லா பொருளையும் இழந்து, சொத்தை இழந்து, நம்முடைய நாட்டுக்காக உயிரை மாய்த்துக் கொண்டார். இப்படி எத்தனையோ தியாகங்கள் தமிழ்நாட்டிலே உண்டு.

தமிழகத்திலே அதிக சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த மாவட்டம் என்றால் இரண்டு மாவட்டம் ஒன்று தூத்துக்குடி மற்றொன்று ஈரோடு. இந்த இரண்டு மாவட்டத்தில் தான் அதிக சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்து தங்களுடைய உயிரை தங்களுடைய உடைமையை எல்லாம் இழந்து அவர்களுடைய ரத்தத்தை சிந்தி வாழ்ந்த பூமி நம்முடைய தமிழ்நாடு. வீரபாண்டிய கட்டப்பொம்மன்னுடன் இணைந்து போராடிய நம்முடைய வீரன் சுந்தரலிங்கமாக இருந்தாலும் சரி, வீரன் வெள்ளையத்தேவன் ஆக இருந்hதலும் சரி அத்தனை பேரையும் நாம் இன்றும் நினைவுக்கூறக்குடிய வகையிலே இருக்கிறோம்.

நம்முடைய மாணவர்கள் எதிர்கால தலைவர்களாகிய நீங்கள் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் நம்மை செதுக்கி கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்றோ ஒரு பொறியாளர் ஆக வேண்டும் என்றோ படிக்க கூடாது. நாம் ஒரு சிறந்த அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும், நான் ஒரு சிறந்த சிந்தனையாளர்கராக என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மனதில் கொண்டு கல்லூரி படிப்பை படிக்க வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

நாம் மதிப்பெண், பட்டம் என்பதை விட்டு விட்டு சிறந்த அறிவாற்றல் மிக்கவர், சிறந்த சிந்தனை சக்தி உடையவர்,சிறந்த சான்றோர், சிறந்த ஒரு எழுத்தாளர், சிறந்த மனிதநேயம் உடையவர் இந்த மாதிரி ஒரு பெயர் ஏற்படுத்திகொள்ளவேண்டும் என்று மாணவ - மாணவியர்களை நான் அன்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் கோட்பாடுகளை தந்த வள்ளுவர் வாழ்ந்த பூமி தமிழகம். ஆகவே நாம் அனைவரும் ஜாதி மத உணர்வுகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கி வைத்துவிட்டு, ஜாதி, மதம் இல்லாத ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Tags:    

Similar News