பால் வியாபாரி வெட்டிக் கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலை சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-26 04:42 GMT

கொலை செய்யப்பட்ட மணி.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணி(50). இவர் மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும், முத்துபேசி என்ற மகளும், நயினார் என்ற மகனும் உள்ளனர்.

இன்று மதியம் வீரவாஞ்சி நகர் 9வது தெருவில் உள்ள தனது மாட்டு தொழுவத்திற்கு பால் கறப்பதற்காக மணி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அங்கு ஓரத்தில் இருசக்கர வாகனத்தின் நிறுத்தி விட்டு கீழே இறங்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மணியை சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் மணி சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

கொலை செய்யப்பட்ட மணிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானையடுத்த வடகரை.‌ கடந்த 2010ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் கொலை வழக்கில் மணிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணி குடும்பத்துடன் அங்கிருந்து கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

2010ல் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்ததா ?  வேறு பகை ஏதும் உள்ளதா என பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலை சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க ரோந்து பணிகளை வலுப்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் முக்கிய நிர்வாகிகள், தூத்துக்குடி வாழ் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags:    

Similar News