தீப்பெட்டி ஆலைகள் மூடல் : தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
தீப்பெட்டி ஆலைகள்.;
இந்தியாவில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யபடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெறுகிறது.
300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2000 என 2300 தொழிற்சாலைகள் மூலமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தீப்;பெட்டி தயாரிக்க தேவையான மரக்குச்
தற்பொழுது அந்த மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல வடமாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தீப்பெட்டிக்கான ஆர்டர்களும் வரவில்லை, இதனால் வரும் 24ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இது குறித்து கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது கொரோனா பரவல் காரணமாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான தீக்குச்சி, மரத்தடி, பொட்டாசியம் குளேரேட் மூலப்பொருள்கள் வருவது தடைபட்டுள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வடமாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தீப்பெட்டி ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் வரும் 24ந்தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகள், அதன் சார்பு ஆலைகள் என 2300 ஆலைகள் மூடப்படுவதாகவும்.இதனால் 200 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்படுவது மட்டுமின்றி 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.