இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட மாரிஸ்வரன்-கடம்பூர் செ ராஜு வாழ்த்து

இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு - கடம்பூர் செ ராஜு வாழ்த்து;

Update: 2021-06-12 14:16 GMT

இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட மாரிஸ்வரன்-கடம்பூர் செ ராஜு வாழ்த்து

கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு - முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கோவில்பட்டி உலகத்தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம் மற்றும் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்று இந்திய ஹாக்கி பயிற்சி முகமைக்கு தேர்வு செய்யப்பட்டு இன்று ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள மாரீஷ்வரனுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற மாரீஸ்வரனுக்கு, தேவையான உதவிகளை செய்து வாழ்த்தி அனுப்பினேன்.

12-09-2011 அன்றைய என்னுடைய சட்டசபை கோரிக்கையை ஏற்று இந்த மைதானத்தை கோவில்பட்டி நகருக்கு வழங்கிய மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த மைதானம் இன்னும் பல ஹாக்கி வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கிட இது ஒரு தொடக்கமாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News