கோவில்பட்டியில் நடந்த மாநில விநாடி-வினா போட்டியில் மதுரை அணி முதலிடம்

கோவில்பட்டியில் நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாநில அளவிலான விநாடி- வினா போட்டியில் மதுரை பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

Update: 2023-10-18 14:04 GMT

விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி  மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான மாபெரும் விநாடி-வினா போட்டி நடைபெற்றது. தொடர்ந்து, ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 320 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கணிதத் துறை உதவி பேராசிரியை எஸ். கீதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கே. காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். விநாடி- வினா போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த். சி. ராமன் தொகுத்து வழங்கினார். முதலில் நடத்தப்பட்ட தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தப் போட்டியில், மதுரை விகாஸா ஹெரிட்டேஜ் காம்பசின் பள்ளி மாணவர்கள் முத்து சிவகாதிர் மற்றும் அஸ்வின் சிவா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். திருநெல்வேலி புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா மற்றும் வீ.பி.ஹரினி இரண்டாம் பரிசும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பொன்செல்வ ஜெயந்த் மற்றும் ஜாய்சன் ராஜா ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.

முதல்பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை கல்லூரி இயக்குநர் சண்முகவேல், கல்லூரியின் முதுநிலை டீன் நீலகண்டன் ஆகியோர் வழங்கினர்.

மேலும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கார்த்திகேயன், ஹரிசுப்ரமணியன், மதுரை எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் மாத்திஸ் பிரபு, ஹரிசரன், பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் இங்கிலிஷ் பள்ளியின் ஸ்ரீநிதி, அமோஹா, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர கோல்டன் ஜூபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மதுவர்ஷினி, ஸ்ரீவத்சன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவிலயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் கார்த்திக் பாண்டியன், ஹரிநாத், சாத்தூர் கே.சி.ஏ.டி.சிதம்பர நாடார் மேல்நிலைப் பள்ளியின் மோனிகா, தர்ஷினி, திருநெல்வேலி ஐ.ஐ.பி.இ.லட்சுமிராமன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய ப்ரியா, இன்டெஸ் ராம், தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியின் ஜெய்சுகன், செல்வப்பிரியா, மதுரை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியின் (சி.பி.எஸ்.இ) சஞ்சய் ஸ்ரீநிவாஸ், சாய் சந்தோஷ், குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கணபதி சுந்தர், திலீபன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த விநாடி-வினா போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சித்திரைக்குமார், பாஷித்தா பர்வீன், அரவிந்த், சதீஷ் பாலகுமாரன், சிவபாலன், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News