கோவில்பட்டி மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

கோவில்பட்டியில் நகராட்சி மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-06 14:07 GMT

கோவில்பட்டியில் நகராட்சி மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் பல்வேறு சேவை சார்ந்த உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் புதுரோடு நகராட்சி மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி,எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்கள், தமிழ் பாடல்கள், விலங்குகள், பறவைகள், தமிழ் எழுத்துக்கள், பூச்சி இனங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பலவகையான விளக்கப் படங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டன. பின்னர் அவர் வகுப்பு நடைபெறும்போது மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அதில் உள்ள விவரங்கள் எடுத்துக் கூறப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த படங்களுடன் கூடிய உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசாபேகம் தலைமை வகித்தார். கோவில்பட்டி ஜேசிஐ செயலாளர் சூர்யா,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஜேசிஐ இணைச் செயலாளர் அருண் பிரசாத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் ராணி விஜயா,முத்துமாரி அங்கன்வாடி ஆசிரியர் நர்மதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மழலையர் பள்ளி ஆசிரியர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News