கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் நல சங்க ஆண்டு விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் 35வது ஆண்டுவிழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு.

Update: 2022-04-23 14:29 GMT

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.

கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் அய்யலுசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சுப்புராம் முன்னிலை வகித்தார். பொருளாளர் அய்யனார் வரவேற்று பேசினார், செயலாளர் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், மாநில துணைத் தலைவர் தங்கவேல், மற்றும் பரமசிவம், ஜெயச்சந்திரன், மாரிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்‌. கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவப்படி ஆயிரமாக உயர்த்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News