கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற மாதாந்திரக் கூட்டம்
கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மகிழ்வோர் மன்றத்தின் சார்பில், மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மன்றத்தின் 73 ஆவது மாதக்கூட்டம், கோவில்பட்டி என்.கே. மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி, புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி இடைநிலைப் பள்ளி ஆசிரியை நிர்மலா தலைமை தாங்கினார். பணிநிறைவு செய்த பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மன்றக் காப்பாளர் துரைராஜ் அனைவரையும் வரவேற்றார்.
வாசிப்பாளரை ஊக்கப்படுத்தும் விதமாக, வாசிப்பதை நேசிப்பவர் விருது ஆசிரியை கவிதா மற்றும் எல்எஸ்வி பள்ளி தமிழாசிரியை ராதா ஆகியோர்க்கு பாராட்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர் நகைச்சுவை துணுக்குகள் கூறினர்.
தொடர்ந்து, தொலைக்காட்சி புகழ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் என்னும் தலைப்பில் மகிழ்வுரை ஆற்றினார். மன்றக் காப்பாளர் சேர்மத்துரை நன்றி கூறினார்.
கூட்டத்தில், மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், மன்றக் காப்பாளர்கள் மோகன்ராஜ், செல்வின், மன்ற ஆலோசகர் ஹரிகிருஷ்ணன், கோவில்பட்டிக் கம்பன் கழக துணைத் தலைவர் ராஜாமணி, துணைச் செயலாளர் மதிவாணன், உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், ஆசிரியர்கள் அருள்காந்தராஜ், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.