கோவில்பட்டியில் குடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்!

கோவில்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் குடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 06:20 GMT

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் குடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்புறம், ரயில்வே நிலையம் வாயில் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.

தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த நிலையில். அந்தப் பகுதியில் மீண்டும் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயிலில் நின்றபடி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கால்நடை மருத்துவமனை எதிர்புறம் பயணிகள் நிழற்குடை இல்லை என்பதால், அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது.

எனவே, அந்தப் பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலைியல், பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தேமுதிகவினர் கையில் குடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகள் நிழற்குடையை அமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தேமுதிக மாநில மகளிர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் சுபபிரியா, மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள்சாமி (மேற்கு), பொன்ராஜ் (கிழக்கு), நகர அவைத்தலைவர் ஆழ்வார், மாவட்ட பிரதிநிதி மதிமுத்து, நகர பொருளாளர் பிரசன்னா, நகர துணை செயலாளர் பாலு‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News