கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி : கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.
மினி மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார்;
கோவில்பட்டியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியை, முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் தனியார் பள்ளி சார்பில் இயற்கை பாதுகாப்பு மற்றும் ஒரு விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு நான்கு கிலோமீட்டர் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 1 கிலோ மீட்டரும் சிறுவர்களுக்கு 500 மீட்டரும் இப்போட்டி முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.