Kitchen Utencils Aided To Handicap கோவில்பட்டியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2500 மதிப்புள்ள சமையல் பொருட்கள் வழங்கல்
Kitchen Utencils Aided To Handicap தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2500 மதிப்புள்ள சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.
Kitchen Utencils Aided To Handicap
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2500 மதிப்புள்ள சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. மாற்றுதிறனாளிகளும் மகிழ்ச்சியாய் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், கோவில்பட்டி கண்தான இயக்கம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2500 மதிப்புள்ள சமையல் பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆடைகள் வெளியூரில் இருந்து வந்தவர்களுக்காக பயணப்படி 100 ரூபாயும் வழங்கி மாற்றுத்திறனாளிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயபுரம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கண் தானம் இயக்கத் தலைவர் விநாயகா ரமேஷ் தலைமையில் 160 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் தீபாவளியை எந்த ஒரு பேதமும் இன்றி கொண்டாடும் வகையில் சர்க்கரை, அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பொரிகடலை, மிளகாய் பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, வத்தல், சலவை சோப்பு, மிளகு, டீ தூள், புத்தாடைகள் மற்றும் இனிப்பு, கார வகைகள், குளிர்காலத்தில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களுக்கான தீபாவளி பரிசை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் கண்தான இயக்க உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், செந்தில்குமார், ஹரிபாலன், பிரசன்னா, சந்திரசேகர், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், மற்றும் அப்துல் கலாம் ரத்ததான கழக தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.