தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய தூத்துக்குடி எம்பி கனிமொழி
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தொழில் சம்பந்தமான கோரிக்கை மனுவை கனிமொழி எம்.பி. யிடம் வழங்கினர்.;
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலகத்தை பார்வையிட்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திலகரத்தினம் ஆகியோர், தீப்பெட்டித் தொழில் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கனிமொழி எம்.பி.,யிடம் வழங்கினர்.
இதில் , தாசில்தார் அமுதா, தி.மு.க., நகர செயலாளர் கருணாநிதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் அமலி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், தீப்பெட்டித் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.