கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்று கோவிலில் கந்த சஷ்டி விழா
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.;
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கபட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார்.
இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீ ராகவேந்திர சேவா அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.