கோவில்பட்டியில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
கோவில்பட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகமும், ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளையும் இணைந்து கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ஜவஹர்லால் நேருவின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நவீன இந்தியாவின் சிற்பி என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தியது.
கருத்தரங்கிற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருவின் திருவுருவப்படத்திற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாவட்டச் செயலாளர் சுப்பாராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தலைவர் அபிராமி முருகன் தொடக்க உரையாற்றினார்.
எழுத்தாளர் சூர்யா சேவியர் சிறப்புரையாற்றினார். கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பேராசிரியர்கள் சம்பத்குமார், முருகசரசுவதி, மற்றும் டெய்சி மனோன்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கலைமாமணி அமலபுஷ்பம் நேரு குறித்து பாடல் பாடினார். கலை இலக்கிய பெருமன்றத்தின் ஜெயா ஜனார்த்தனன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரிஷீலா நன்றியுரை கூறினார்.
கருத்தரங்கில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, கலைச்செல்வன், நாம் தமிழர் வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு அருள்தாஸ், ஐஎன்டியுசி ராஜசேகரன், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், லட்சுமணன், ஆவல்நத்தம் லட்சுமணன், உரத்த சிந்தனை சிவானந்தம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாடசாமி, தொழிலதிபர் இப்ராகிம், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை, தர்மம் வெல்லும் அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன், மேனாள் நூலக ஆய்வாளர் பூல்பாண்டியன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.