தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 3வது நாளாக கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த கோடை காலங்களை விட இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இன்று மதியம் 12 மணி முதலே கோவில்பட்டி நகரில் லேசான சாரலுடன் மழை தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்து வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி விளாத்திகுளம், எட்டையாபுரம் ,கயத்தார், கழுகுமலை பகுதியிலும் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு இந்த மழை நிம்மதி பெருமூச்சை கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.