பெண் குழந்தைகள் தினம்: கோவில்பட்டியில் சிறுமிகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு.

Update: 2021-10-11 11:32 GMT

பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு - பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்திட உறுதி ஏற்பு.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வரலாறு மன்றம் சார்பில் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் அவர்களின் ஆலோசனையின் பேரில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து கவுரவ படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பெண் குழந்தைகளை வரவேற்று போற்றி பாதுகாத்திட நாடு முழுவதும் அக்டோபர் 11ம்தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாடார் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து நெற்றி திலகமிட்டு பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்திடவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்தவும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடவும்உறுதி மொழி எடுத்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை டாரதி செல்வின் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் கணேசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு கீரிடம் சூட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் மீனா, நாடார் நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்கள் அருள் காந்தராஜ், அருணா,சீனியம்மாள்,செல்வி,பூங்கொடி, ஷீபா ராணி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியை தாயம்மாள் நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை ஆசிரியை ஜெய ஜீவா தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News