கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி

கோவில்பட்டி அருகே மாவட்ட அளவில் நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-05-29 07:49 GMT

கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில் கோவில்பட்டி மின்னல் கிளப் அணியும், தூத்துக்குடி IHS அணியும் மோதின. இந்தப் போட்டியில் கோவில்பட்டி மின்னல் கிளப் அணி சிறப்பாக விளையாடி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை தூத்துக்குடி IHS அணியும், மூன்றாவது இடத்தை திருச்செந்தூர் அணியும் பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தார். மேலும், வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்த கோவில்பட்டி மின்னல் கிளப் அணி அணிக்கு சுழற்கோப்பையும் 10,000 ரூபாய் பரிசு தொகையும் வழங்கினார்.


இரண்டாம் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி IHS அணிக்கு சுழற்கோப்பையும் 7,000 ரூபாய் பரிசு தொகையும், மூன்றாம் இடத்தை பிடித்த திருச்செந்தூர் அணிக்கு சுழற்கோப்பையும் 5,000 ரூபாய் பரிசு தொகையும் கடம்பூர் ராஜூ வழங்கினா‌. நிகழ்ச்சியில், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஊராட்சி துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், சீனிவாசநகர் பிரதிநிதி அம்பிகை பாலன், கிளைச் செயலாளர்கள் முருகன், சுந்தர், லட்சுமணபிரபு, மற்றும் அதிமுக நிர்வாகிகள் வேல்ராஜ், கோபி, முருகன், பழனி குமார், மாரிமுத்து, விக்னேஷ், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், போட்டிக்கான ஏற்பாடுகளை பிரபாகரன், அருள்ஜோதி, செல்வக்குமார், லாசர் ஆரோக்கியராஜ், முத்துவேல், மாரிக்கண்ணன், சதீஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News