கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது.

Update: 2023-04-11 12:01 GMT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு..க. வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி முன்னிலையில் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின்போது, 2018-19 ஆம் ஆண்டுகளில் டெண்டர் விடப்பட்டு முடிவு பெறாத பணிகளை ரத்து செய்து அந்த அந்த பணிக்கான நிதியை திரும்ப பெற்று கவுன்சிலர்களுக்கு தொகுதி பணிகளை மேற்கொள்ள அந்த நிதியை ஒதுக்கீடு வேண்டும் என்றும் எந்தப் பணியை மேற்கொண்டாலும் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.


மேலும், தற்காலிக பணி நியமனம் மற்றும் முகக் கவசம் வாங்கியவையில் முறையீடு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர், சுயேட்சை கவுன்சிலர் செந்தில்குமார், தி.மு.க. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பூமாரி, தி.மு.க. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுந்தரேஸ்வரி உள்ளிட்டோர் மாறி மாறி ஒன்றிய குழு தலைவரிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அ.தி.மு.க, தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News