லேப் டெக்னீசியன்களுக்கு கொரோனா பரிசோதனை: விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன்களுக்கான கொரோனா கால பரிசோதனை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2021-09-20 18:15 GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பயிற்சிமுகாமில் பங்கேற்ற லேப்டெக்னீசியன் நலச்சங்கத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன்களுக்கான கொரோனா கால பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றதுகொரேனா காலத்தில் லேப் டெக்னீசியன்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்து லேப் டெக்னீசியன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார்.பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க அகில இந்திய தலைவர் காளிதாசன், மாநிலத் தலைவர் துரைசாமி,கொள்கை பரப்புச் செயலாளர் உலகநாதன், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் ஆனந்த், சுந்தரராஜன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆலோசகர் டாக்டர் பழனியப்பன் கொரானோ காலங்களில் பரிசோதனை மையங்களின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும்,டாக்டர் லட்சுமி சித்ரா பரிசோதனைகளின் வகைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாமில்தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் திருமலைக்குமார், ராஜாராம், மதன் ஜெயராஜ், ரத்தினா பாய், ஜாய் பிரபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், ஜெபசிங்,கிறிஸ்துராஜ், ராஜா, மூக்காண்டி, மைக்கேல் பிரதீப் உள்பட எட்டையாபுரம்,விளாத்திகுளம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட லேப் டெக்னீசியன்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலா வரவேற்றார். முடிவில் மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News