கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பார்வையிட்டார்.

Update: 2021-08-31 09:51 GMT

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம்.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10, 11 மற்றும் 12 வகுப்புகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் மற்றும் அந்தந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா? கழிப்பறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் சரியான முறையில் உள்ளதா? வகுப்பறைகள் தூய்மையாக இருக்கிறதா ? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News