கோவில்பட்டி அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
பாண்டவர்மங்கலம் ஊராட்சி, பாலாஜி நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.;
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் 3 வது தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 8 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் இன்று பதவி ஏற்று கோவில்பட்டி சட்டமன்ற அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள், ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, வழக்கறிஞர் ரத்தினராஜ், கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, 2 வது வார்டு கிளைச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் போர்டு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.