அனைத்து குற்றவாளிகளுக்கும் பரோல்; கயத்தாறு காங்கிரசார் போராட்டம்
சிறையில் இருக்கும் அனைவருக்கும் பரோல் வழங்க வேண்டும் என கயத்தாறில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கக்கூடாது என காங்கிசார் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு ௩௦ நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதனை கண்டித்து கயத்தாரில் காங்கிரசார் போராட்ட்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தமிழக அரசு பரோல் வழங்கக்கூடாது. அரசியல் லாப நோக்கத்திற்காக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.
எனவே சிறையில் இருக்கக் கூடிய தண்டனை பெற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி தலைமையில், முகத்தை துணியால் மூடிக்கொண்டும், கழுத்தில் கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கயத்தார் தாசில்தார் பேச்சிமுத்துவிடம் வழங்கினர். கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் கருப்பசாமி, எஸ்.சி. எஸ் டி பிரிவு நகரத்தலைவர் தாசன், மகளிரணி நிர்வாகி சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.