கோவில்பட்டி தனியார் கல்லூரியில் கணிப்பொறி ஆய்வகம் திறப்பு விழா

கோவில்பட்டி GVN கல்லூரி கணிதவியல் துறை சார்பாக கணிப்பொறி ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2021-09-06 05:35 GMT
கோவில்பட்டி தனியார் கல்லூரியில் கணிப்பொறி ஆய்வகம் திறப்பு விழா

கோவில்பட்டி GVN கல்லூரி கணிதவியல் துறை சார்பாக கணிப்பொறி ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது.

  • whatsapp icon

கோவில்பட்டி GVN கல்லூரி கணிதவியல் துறை சார்பாக கணிப்பொறி ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முனைவர். மகேந்திரன் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரும், ரேணுகா குழும நிறுவனங்களின் நிறுவனருமான ஆர். செல்வராஜ் கலந்து கொண்டு கணிப்பொறி ஆய்வகத்தை திறந்துவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி மகேஸ்வரி மற்றும் மூத்த பேராசிரியர் முனைவர் சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னாள் மாணவரும் மைப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான காளிமுத்து, ரீச் அகடமி பயிற்றுநர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர் முகேஷ் குமார் வரவேற்புரையாற்றினார். முதுகலை இரண்டாமாண்டு மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News