காந்தி ஜெயந்தியையொட்டி கோவில்பட்டியில் குப்பையில்லா நகரத்தை உருவாக்கிட உறுதி ஏற்பு
கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குப்பையில்லா நகரத்தைக் உருவாக்கிட உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி கோவில்பட்டி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கட்டிடத்தில் குப்பையில்லா நகரத்தைக் உருவாக்கிட உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அலுவலக உதவியாளர் சங்க செயலாளர் கால்நடைத்துறை குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நடராஜன், காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மகாத்மா காந்திஜியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், தூய்மை பணியில் தங்களை இணைத்துக்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிடவும் குப்பையில்லா நகரத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பணி நிறைவு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் புல்பாண்டி, சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், அலுவலக பதிவாளர் சங்க முன்னாள் செயலாளர் சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.