கோவில்பட்டி அருகே இரு கிராமத்தினரிடையே மோதல்: 10 பேர் காயம்

கோவில்பட்டி அருகே அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கபடி போட்டி தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.;

Update: 2023-04-17 07:11 GMT

கோவில்பட்டி அருகே நள்ளிரவில் தெருக்களில் அமர்ந்திருந்த கலைஞானபுரம் பகுதி மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன் குளம் புதிய பூக்கள் கபடி குழு சார்பாக நடைபெற்ற கபடி போட்டியில் கலைஞானபுரம் அணியும் அதற்கு எதிராக சிலுவை புரம் அணியும் மோதினர்.

இதில் கலைஞான புரம் அணி தோல்வியுற்றது. கலைஞானபுரம் அணியின் தோல்வியுற்றதும் துலுக்கன் குளம் கிராம இளைஞர்கள் சிலர் கைதட்டி எரிச்சல் ஊட்டும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போதே இரு தரப்பினருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், துலுக்கன்குளம் இளைஞர்கள் மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் போதையில் வீடு திரும்பும் பொழுது அதிக ஒலி எழுப்பியபடியே சென்றராம். அவர்கள், கலைஞானபுரத்தை சேர்ந்த தொண்டியம்மாள் வீட்டின் அருகே வரும்போது தொண்டியம்மாள் வழி மறித்து கண்டித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தநிலையில் தகவல் அறிந்து துலுக்கன்குளம் கிராமத்தினர் கலைஞானபுரம் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி மாறி தாக்கி கொண்டதில் இருதரப்பினரிலும் காயம் அடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இரண்டு கிராமங்களிலும் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News