தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது: கோவில்பட்டி கோட்டாட்சியர்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-11-08 18:39 GMT

கோப்பு படம் 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடுவில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பல நபர்கள் விட்டு வருகின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்பட்டு, மனித உயிரிழப்புகளும், கால்நடை இழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் நபர்களின் மீது குற்றவியல் சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கை எடுக்க நேரிடும். மேலும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும்.எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். மேலும் தற்போது மழை அதிகமாக பெய்து குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை குளத்திற்கு குளிக்க அனுமதிக்கக் கூடாது எனவும், பொதுமக்கள் மின்கம்பங்களில் ஏறி மின்சாரத்தை சரி செய்யக் கூடாது எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News