தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணித்துறை சார்பில் ஏப்ரல் 14ம்தேதி முதல் 20ம்தேதி வரை தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் முன்னிலையில் மாணவிகளுக்கு தீ விபத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ பரவாமல் தடுக்கக்கூடிய செயல்கள் குறித்தும் தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை காட்சியாக விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கினார்.
மேலும் தீ விபத்து மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியர் ரூத் ரத்தினகுமாரி, ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன், உள்ளிட்ட மாணவிகள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.