காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்

கோவில்பட்டி காப்பகத்தில் தங்கியிருக்கும், மனநலம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-22 02:15 GMT

கோவில்பட்டியில், காப்பகங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு நடைபெற்றது. 

தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் உத்தரவுக்கு இணங்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி,  ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், செம்மபுதூர், முடுக்கு மீண்டான்பட்டி ஆகிய இரு காப்பகங்களில் தங்கி இருக்கும் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், எட்டையாபுரம் தாசில்தார் ஐயப்பன் . கோவில்பட்டி தாசில்தார் அமுதா ஆகியோரின் ஏற்பாட்டின்படி நடந்த இரு நாள் சிறப்பு முகாமில், 32 ஆண்கள், 15 பெண்களுக்கு ஆதார் பதிவு செய்யப் பட்டது. அனைவருக்கும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி தேன்ராஜாவிடம்,  ரசீது ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் புஷ்பராஜ், கற்பக புஷ்பம் ஆகியோர்,  ஆதார் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News