கோவில்பட்டி அருகே மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் காயம்
கோவில்பட்டி அருகே பழங்கள் ஏற்றி சென்ற மினி லாரி சாலையில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை கூடலூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மதுரை - திருவனந்தபுரம் இடையில் லாரி சர்வீஸ் தாெழில் செய்து வருகிறார். இவரது லாரி மூலமாக மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பழங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவும் வழக்கம் போல சக்திவேல் மினி லாரியில் சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பப்பாளி, ஆப்பிள், திராட்சை என பல்வேறு பழங்கள் ஏற்பட்டு திருவனந்தபுரத்திற்கு கிளம்பியுள்ளது.
மினிலாரியை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் ஓட்டிள்ளார். அவருடன் மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த கீளினர் கிருஷ்ணனும் உடன் இருந்துள்ளார். மினி லாரி இன்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் - இடைச்செவல் இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில் ரமேஷ் மற்றும் கிருஷ்ணணுக்கு லேசான காயம் அடைந்தனர்.
மினிலாரி விபத்துக்குள்ளானதில் பழங்கள் அனைத்தும் சாலையில் சிதறின. விபத்து குறித்து தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் லாரி உரிமையாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர் பழங்களை இனி கொண்டு செல்ல முடியாது என்பதால் அப்பகுதி மக்களை எடுத்து செல்லுங்கள் என்று கூறியதால் அப்பகுதி பொது மக்கள் மூட்டை மூட்டையாக பழங்களை கட்டிச் சென்றனர்.