கோவில்பட்டி பள்ளியில் வ.உ.சியின் படம் வரைந்து 152 அகல்விளக்கேற்றி மரியாதை
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டுவ உ சி யின் படம் வரைந்து 152 அகல் விளக்கு ஏற்றி மரியாதை செய்துகாகித கப்பலை நீரில் மிதக்க விட்டு சுதேசி பொருட்களை வாங்கிட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பர பிள்ளையின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு வஉசி யின் படம் வரைந்து 152 அகல் விளக்கு ஏற்றி மரியாதை செய்துகாகித கப்பலை நீரில் மிதக்க விட்டு சுதேசி பொருட்களை வாங்கிட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் வ உ சி யின் படம் வரைந்து 152 அகல்விளக்கேற்றி சுதேசி பொருட்களை வாங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,தேசபக்தி தேச ஒற்றுமை வளர்த்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர், கப்பலோட்டிய தமிழனை நினைவு கூறும் வகையில் காகித கப்பலை நீரில் மிதக்க விட்டு மாணவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெள்ளைச்சாமி, ஆசிரியர்கள் ஷீபாராணி, கனகலட்சுமி, மாலா தேவி, செல்வராணி, பிருந்தா தேவி, அமலா தேவி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.