கோவில்பட்டி பகுதியில் 2 வது நாளாக கனமழை.
வெப்ப தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2வது நாளாக பலத்த மழை பெய்ததது. இதனால் கடும் வெப்பத்தினால் சிரமப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தினால் கடும் அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டும் பெய்ததது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுட்டவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிமாக இருந்தது, மதியத்திற்கு மேல் வெயில் தாக்கம் குறைந்த வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தீடீரென லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக பெய்தது. கோவில்பட்டி, இனாம்மணியாச்சி, மந்திதோப்பு, சுபா நகர், அய்யநேரி,அப்பனேரி, சாலைப்புதூர், ஆலம்பட்டி பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததது. 2 நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வெப்ப தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.