இராணுவ வீரர் - கொல்கத்தாவில் உடல் நலக்குறைவினால் உயிரிழப்பு..
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இராணுவ வீரர்.;
கோவில்பட்டி ராணுவ வீரர் முத்துக்குமார் (லைவ் போட்டோ)
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இராணு வீரர் கொல்கத்தாவில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டி கிராமத்தினை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முத்துக்குமார் (33). இவர் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் ராணுவ பிரிவில் நாயக் பதவியில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 17ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள இராணு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்தார்.
இதையெடுத்து முத்துக்குமார் உடல் விமானம் மூலமாக இன்று சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இராணுவ வாகனத்தின் மூலமாக நாளை சொந்த ஊரான நக்கலமுத்தன்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு இராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
முத்துக்குமாருக்கு திருமணமாகி கவிதா (30) என்ற மனைவியும், முகிதா என்ற 3வயது பெண்குழந்தையும், முகேஷ் என்ற 6 மாத கைகுழந்தையும் உள்ளது. முத்துக்குமார் மரண செய்தி கேட்டு நக்கலமுத்தன்பட்டி கிராமம் சோகத்தில் உள்ளது.