மு.க ஸ்டாலினுக்கு - முன்னாள் அதிமுக அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரீகம் -வரவேற்கத்தக்கது.
கி.ராவின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதை,கோவில்பட்டியில் அவருக்கு திருவுருவச் சிலை, அவர் பயின்ற பள்ளி புனரமைப்பு என ௩ அறிவிப்புகள் தந்த தமிழக முதல்வருக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிப்பு செய்ததற்கும், கோவில்பட்டியில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும், இடைச்செவல் கிராமத்தில் அவர் பயின்ற பள்ளி புனரமைப்பு செய்யப்படும் இன்று அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் செய்தித் துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் கி.ரா. வின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து கொண்டாட வேண்டும், ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் கி.ராவின் பெயரில் விருது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்.