உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு போக மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையில்.;

Update: 2021-05-13 15:40 GMT

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு போக மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவனையில் தமிழக சமூக நலன் - மகளிர் உரிமத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர்.

கொரோனா சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தேவைகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மற்றும் ஆலோசனை மையத்தினையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாவட்ட மருத்துவ பணி இணைஇயக்குநர் முருகவேல், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணணன், வட்டாச்சியர் அமுதா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், நகராட்சி ஆணையர் ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வினை தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு போக மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்,

எல்லோரும் உயிர்கள், எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, தமிழகத்தில் உள்ள தேவைகளை சரிசெய்து விட்டு, எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு செல்லாம் என்றார்.

தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனையில் மருத்துவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்துவது குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர்,

இறப்பு விகிதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. எனவே கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கனிமொழி எம்.பியுடன் ஆய்வு செய்து வருகிறோம், கோவில்பட்டி அரசு மருத்துவனையில் ஆய்வு செய்த போது கூடுதலாக மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். எனவே கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பணி அமர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி லெட்சுமி அம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரியில் கோவிட் சிகிச்சை மைய அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று வகைப்படுத்தப்படும் மையமும் அமைக்கபடவுள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் ஒத்துழழைப்பு தரவேண்டும், முககவசம் அணிய வேண்டும் காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரிடம் ஆலோசனை செய்து மருந்து எடுத்து கொள்ள வேண்டும், தாமதமாக வருவதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய் தாக்கத்துடன் வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யபட்ட முதல் ஆக்சிஜன் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் எங்கு அனுப்பவுது குறித்து உச்ச நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி முடிவு செய்யும் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றார்.

Tags:    

Similar News