முருகன் சிலை அமைக்க கால்கோல் விழா: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்;
கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தை கொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தங்க கொடிமரம் திருப்பணி, அத்தைகொண்டானில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 135 அடி உயரத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகள் ஆகிய பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் 11 மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. கூடுதலாக 9 மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிகப்பட்டது. அந்த வகையில் இன்று ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு தனியாக இணை ஆணையர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருள்மிகு சொர்ணமலை கதிரேசன் கோவிலில் 135 அடி உயரத்தில் 123 அடி சிலையும் 12 அடி பீடத்துடன் முருகன் சிலை அமைப்பதற்கு இன்று கால்கோல் விழா செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து படிப்படியாக மீட்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். படிப்படியாக இவை மீட்கப்பட்டு கோவில் கணக்கில் சேர்க்கப்படும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ரூ.28 கோடி மதிப்பில் யாத்ரி நிவாஸ் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இருந்த பழைய அறைகள் பழைய அறைகள் பழுதடைந்து உள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கு வழங்கப்படாமல் உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் வெளி பிரகாரம் தற்காலிக அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக பிரகாரம் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். பழனி முருகன் கோவில் பிரசாதம் தபால் துறையின் மூலம் வழங்கப்படுவதை போல தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் பிரசாதங்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். படிப்படியாக தொடங்கப்படும். கடந்த 4 ஆண்டுகளில் கிட்டதட்ட 12000 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் ஆகம விதி அடிப்படையில் 12 ஆண்டுகள் முடிந்த திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவில்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் விஜயபாலமுருகன் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் தங்க கொடிமரம் அமைக்க நன்கொடையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் பரஞ்ஜோதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, மலேசியா பத்துமலை முருகன் கோவில் முருகன் சிலை செய்த ஸ்தபதி தியாகராஜன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் சிவகளைபிரியா, திருநெல்வேலி மண்டல ஸ்தபதி செந்தில், ஸ்ரீரெங்கம் ஆனந்த்ஸ்பதி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரை பாண்டியன் உட்பட அலுவலர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.