விடியலை நோக்கி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலினின் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மக்கள் சந்திப்பு கூட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு கலைஞர் திடலில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு கோவில்பட்டிக்கு வந்தார் ஸ்டாலின், அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து தனியார் விருந்தினர் இல்லத்தில் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடினார்.