பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி காங்கிரஸ் அங்கப்பிரதட்சனம்

Update: 2020-12-26 08:12 GMT

பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அங்கப்பிரதட்சனம் செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

கயத்தார் தாலுகா கடம்பூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம், ‌ குப்பனாபுரம், ஒட்டுடன் பட்டி, சங்கரபேரி, ஓநமாக்குளம், இளவேளங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் ,‌பருத்தி, நெல் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2019 - 20ம்‌ ஆண்டுக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். தற்போது பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் கடம்பூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு தற்போது வரை பயிர்க் காப்பீட்டுத் தொகை கணக்கில் வரவு வைக்கப் படவில்லை என கூறப்படுகிறது. எனவே விரைந்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை தாமதமாக பெய்த காரணத்தினாலும்,‌ படைப்புழு தாக்குதல்,‌ மஞ்சள் நோய் தாக்கம் ‌ போன்ற காரணங்களினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி , காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் அக்கட்சியினர் மீனாட்சி அம்மன் படத்தை கையில் வைத்துக்கொண்டு, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கப்பிரதட்சணை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, ‌ கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை,‌ வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா,‌ சேவா தள மாவட்ட தலைவர் சக்தி விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News