ஸ்டெர்லைட் கலவரம்-பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமனஆணை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச் 22 ம் தேதி போராட்டம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்த சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்...
.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் வழங்கினார்.
மதுரை தோப்பூரில் 500 ஆச்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.போலீஸ் தாக்குதலில் தீவிர காயமடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச் 22 ம் தேதி போராட்டம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்த சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
காற்று, நிலம், நீர் என சுற்றுச்சூழலை ஸ்டெர்லைட் தாமிர ஆலை மாசுபடுத்தியுள்ளதாக கூறி, பலருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக்கூறி 2018ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் அமைதிவழியில் மக்கள் போராட்டம் நடத்தினர். 100 வது நாளன்று ஊர்மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்துவந்த மக்கள் திரள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 15 நபர்கள் கொல்லப்பட்டனர். பலரும் காயமடைந்தனர்.
இதனை அடுத்து, உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் எப்படி நடந்தது, யார் உத்தரவின் பேரில் மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன . தமிழக அரசு இதற்கு தீர்வு காண்பதாகக் கூறி ஒர் ஆணையத்தை மார்ச் மாதமே அமைத்தது. தொடர்ந்து ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அன்மையில் தமிழக முதல்வரிடம் ஆணையத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி தகுதி அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இன்று மதுரையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் இவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கினார். கல்வித்தகுதி அடிப்படையில் 17 பேருக்கு இளநிலை உதவியாளர் (ஜூனியர் அசிஸ்டென்ட்) ஒருவருக்கு டிரைவர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டது.போலீஸ் தாக்குதலில் தீவிர காயமடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இதில் இரண்டு பேருக்கு கொரனா பாதிப்பு உள்ளதால் மீதி 15 பேர் மட்டும் பெற்றனர்.
நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.