திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசு

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசுவை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.;

Update: 2022-03-11 12:09 GMT

3கன்று குட்டிகளை ஈன்ற பசு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள  மேலப்பெருமழை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் உம்பளச்சேரி இன நாட்டு பசுமாடு வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் இந்த மாடு 3 கன்றுகளை ஈன்றது .இது குறித்து கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தவுடன் அவர் பரிசோதித்துப் பார்த்தபோது கன்றுக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற செய்தி அறிந்த அக்கம் பக்க கிராமத்தினர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News