திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே குலமாணிக்கத்தில் வீட்டின் சுவர் பக்கத்து வீட்டில் விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 83.குலமாணிக்கம் தென்பாதி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (85),விவசாய கூலி தொழிலாளி கூரை வீட்டில் வசித்து வருகிறார் .இவரது மனைவி சுந்தராம்பாள். இருவரும் வீட்டில் இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.
இவர்களது வீட்டின் அருகில் இருந்த அருமைக்கண்ணு என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து மாரிமுத்து வீட்டில் விழுந்ததில் மாரிமுத்து அவரது மனைவி சுந்தராம்பாள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சுந்தராம்பாள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர் .
சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து குறித்து களப்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.