திருத்துறைப்பூண்டியில் கிராம நிர்வாக அலுவலரை காணவில்லை எனக் கூறி தர்ணா

திருத்துறைப்பூண்டியில் கிராம நிர்வாக அலுவலரை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-15 17:31 GMT

கிராம  நிர்வாக அலுவலரை காணவில்லை எனக்கூறி திருத்துறைப்பூண்டியில் தர்ணா போராட்டம் நடந்தது.

அண்மையில் பெய்த மழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா பயிர்களை பயிர் காப்பீடு செய்வதற்கு இன்றைய தினமே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகர மக்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான சான்றிதழ் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனை தொடர்பு கொள்ள இயலாததால் இன்றைய தினம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பாக தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை காணவில்லை என்ற கோஷத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமே பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி தினம் என்பதால் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரால் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் உடனடியாகபொறுப்பு கிராம நிர்வாக அலுவலரை நியமித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News