திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் 300க்கும் மேற்பட்ட வாடகை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Update: 2022-02-22 15:56 GMT

வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில்வே வேகன்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரே ஒரு ஒப்பந்ததாராக ஆர்கானிகா செயல்பட்டு வருகிறார். இவர் மூலம் தற்பொழுது வெங்கடேஸ்வரா என்பவர் சப் காண்ட்ராக்டராக செயல்பட்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு லாரி வாடகை 11 சதவீதம் கூடுதலாகவும் திருத்துறைப்பூண்டிக்கு 11 சதவீதம் குறைவாகவும் தற்போது வழங்குவதாக குற்றச்சாட்டு தெரிவித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக 300-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நேரடியாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த வேலைநிறுத்தம் காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தலைவர் ஆறுமுகத்தின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

Tags:    

Similar News