காரைக்குடி - திருவாரூருக்கு விரைவில் நேரடி ரயில் சேவை துவக்கம்

காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு நேரடி ரயில் இயக்கப்படவுள்ளது என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்;

Update: 2022-02-25 14:30 GMT

திருத்துறைப்பூண்டியில் ஆய்வு மேற்கொண்ட, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர். 

காரைக்குடியில் தொடங்கி திருவாரூர் வரை,  ரயில் பாதை, ரயில் நிலையங்கள் ஆகியவற்றை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் இன்று ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்தது திருத்துறைப்பூண்டி ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த ரயில்வே பாதையில் உள்ள 70 ரயில்வே கேட்களுக்கு பகல் நேரத்தில் பணியாற்றும் வகையில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர கேட் கீப்பர்களாக, முன்னாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில்,  சோழன் ரயிலை இணைக்கும் வகையில், காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை ஒரு ரயிலும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில், மதுரை வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இரவுநேர கேட் கீப்பர்கள் நியமனத்திற்கு பிறகு,  காரைக்குடியில் இருந்து சென்னைக்கும், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது. தற்போது நடைபெற்றும் வரும் திருத்துறைப்பூண்டி - வேளாங்கன்னி ரயில் பாதை அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News